அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் எடுத்து வருகின்றநிலையில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க இராணுவ விமானம் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொலம்பியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
இதற்கிடையே அமெரிக்க விமானங்களில் திருப்பி அனுப்பப்படும் குடிமக்களை ஏற்க கொலம்பியா முன்வந்தது. இதனால் மோதல் முடிவுக்கு வந்து இரு நாடுகளுக்கிடையே மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளன.
அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வர 2 இராணுவ விமானங்களை கொலம்பிய அரசு அனுப்பியது .கொலம்பியாவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு அந்த விமானங்கள் கொலம்பிய தலைநகரைச் சென்றடைந்தது.