15.2 C
Scarborough

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்!

Must read

பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு WWE அமைப்பு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிளியர்வாட்டர் நகரில் உள்ள தனது வீட்டில் வியாழக்கிழமை காலை ஹல்க் ஹோகன் காலமானார். அமெரிக்காவில் அவசர கால உதவிக்கான ‘911’ எண்ணுக்கு மாரடைப்பு குறித்து அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரது வீட்டுக்கு விரைந்த நிலையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கான மருத்துவ காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

“WWE-ன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ள மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஹல்க் ஹோகன் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்துள்ளோம். WWE-ன் முகங்களில் ஒருவராக பரவலான மக்களால் அறியப்படுபவர் ஹல்க் ஹோகன். 1980-களில் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று WWE கூறியுள்ளது.

அவரது மறைவுக்கு உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜுனியர், ரிக் ஃபிளார் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆறு முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் ஹல்க் ஹோகன். கடந்த 2005-ல் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார். தலையில் அவர் அணியும் ஸ்கார்ஃப், கண் கண்ணாடி மற்றும் ஹார்ஸ்-ஷூ ஸ்டைல் மீசையும்தான் அவரது அடையாளம். 90-களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட WWE மல்யுத்த வீரர்களில் ஒருவர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article