இலங்கைக்கு எதிரான T20 தொடரை இங்கிலாந்து 2–0 என கைப்பற்றியது. மழையால் ஆட்டம் தடைபட்டாலும், DLS முறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக எட்டியது.
இங்கிலாந்து அணியின் டாம் பேன்டனின் அதிரடியான அரைசதமும், ஹாரி ப்ரூக்கின் குறுகிய ஆனால் வேகமான இன்னிங்ஸும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
பேன்டன் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ப்ரூக் 12 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முழுமையாக இங்கிலாந்து பக்கம் திருப்பினார்.
இலங்கை நல்ல தொடக்கம் பெற்றபோதும், நடுப்பகுதியில் விக்கெட்டுகளை இழந்து எதிர்பார்த்ததைவிட குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்தின் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
மழைக்குப் பிறகு ஈரமான பந்தால் இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். இதனால் ஒரு தொடரை போலவே T20 தொடரையும் வென்ற இங்கிலாந்து அணி கைபற்றியது.
Image – ESPN

