1.8 C
Scarborough

F-35 ‘அற்புதமான வெற்றி’ – அமெரிக்க தூதர்!

Must read

கனடாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில், கனேடிய அரசாங்கம் சரியாக என்ன சொய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் உண்மையில் காத்திருக்கிறோம், என்று புதன்கிழமை Ottawa வில் நடைபெற்ற 2025 தேசிய உற்பத்தி மாநாட்டில் Pete Hoekstra கூறினார்.

கனடா ஒரு “இறையாண்மை கொண்ட நாடு” என்றும், சிறந்த போர் விமான கொள்முதல் திட்டம் குறித்து Ottawa தனது சொந்த முடிவை எடுக்கும் என்றும், Hoekstra வலியுறுத்திய அதே வேளையில், அவர் தனது போர் விமான உரையாடலில் F-35 போர் விமானத் திட்டத்தையும் பலமுறை எழுப்பினார்.

F-35 ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது என்று அவர் கூறினார், இந்த விமானம் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பின் தயாரிப்பு என்றும், அதில் முதலில் கையெழுத்திட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என்றும் குறிப்பிட்டார். இது ஒரு அமெரிக்க விமானம் அல்ல. இது ஒரு சர்வதேச விமானம் என்றும் Hoekstra கூறினார்.

F-35 விநியோகச் சங்கிலியை நல்ல ஒருங்கிணைப்பிற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறிய அமெரிக்க தூதுவர், ஆனால் உங்களுக்குத் தெரியும், கனடா அதன் பாதுகாப்புத் துறையை மறுபரிசீலனை செய்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பல வருட தாமதங்களுக்குப் பின்னர் 2023 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தில், அமெரிக்க உற்பத்தியாளர் Lockheed Martin இடமிருந்து 88, F-35 போர் விமானங்களை வாங்க கனடா உறுதியளித்தது. ஆனால், அமெரிக்காவுடனான வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசாங்கம் கூறியது. இதற்கிடையில், 88 விமானங்களில் பதினாறு விமானங்கள் ஏற்கனவே தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கனடா Swedish விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான Saab இடமிருந்து Gripen போர் விமானங்களை வாங்குவதன் மூலம் அதன் போர் விமானக் கடற்படையை பல்வகைப்படுத்த தயாராகலாம் என்று சமிக்ஞை செய்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article