அமெரிக்க அதிபர் Donald Trump, குறிப்பிட்ட சில தொழில்துறைகளைப் பாதிக்கும் வரிவிதிப்புகளைக் குறைப்பது குறித்து இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதற்கு கனடா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் Mark...
கனடாவின் மத்திய ஒன்டாரியோ மற்றும் வடமேற்கு கியுபெக் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒன்டாரியோவில் இந்த பனிப்புயல் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீடிக்கும்...
கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட...
Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும...
இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளது.
இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும்...
அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர்...
அமெரிக்காவின் வலிமையை மீட்டுள்ளேன் என்றும் 8 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
80 வயதாகும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். உடலில்...
சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் அறிவித்திருந்தனர். 50 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
24 வயதான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதலின் போது அவரது தந்தை சஜித் கொல்லப்பட்டார். இந்நிலையில், நாட்டின் தேசிய அமைச்சரவை துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் ஒரு பகுதியான ஊடகங்களிடம் இன்று பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் தற்போது, நான்கு மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது போர்ட் ஆர்தர் படுகொலை நடந்த நேரத்தில் இருந்ததை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன.
இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் (Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.
துப்பாக்கிகள் மீளப்பெறப்பட்டன. அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.