11.6 C
Scarborough

தமிழகத்தில் புதிய சகாப்தம்!

Must read

இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

அத்துடன் அந்தக்கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக்கழகம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எனவே அது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 47 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இவற்றை தவிர இந்திய தேசிய காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கொம்யூனிஸக்கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தலா இரண்டு தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளன.

பாரதீய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்பன தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்தநிலையில் சாதாரணப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், 108 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ள தமிழக வெற்றிக்கழகத்துக்கு இன்னும் 10 ஆசனங்கள் அவசியமாகின்றன.

இதனடிப்படையில் தற்போது தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகம், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article