Toronto நகரில் ஒரே கட்டிடத்தை ஆறு வீடுகளாகப் பிரித்து கட்டப்படும் Sixplex முறைக்கு ஒருபுறம் ஆதரவு பெருகினாலும், பல பகுதிகளில் குடியிருப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் McRoberts Avenue பகுதியில் இவ்வாறான ஒரு திட்டத்திற்கு Committee of Adjustment அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.
புதிய Caledonia ரயில் நிலையத்திற்கு அருகில் இந்தத் திட்டம் அமைவதால், மக்கள் தொகை அடர்த்தியை அதிகரிக்க இது அவசியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், “இது நகரின் அமைதியான சூழலை அழித்துவிடும்” என அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான திட்டங்கள் நிலத்தின் விலையை உயர்த்தி, சாதாரண குடும்பங்கள் வீடு வாங்குவதை கடினமாக்கும் என Scarborough Southwest பகுதி கவுன்சிலர் Parthi Kandavel எச்சரித்துள்ளார்.
வீட்டு வசதி நெருக்கடியைத் தீர்க்க இது உதவும் என வடிவமைப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், அண்டை வீடுகளின் உயரத்தை தவறாகச் சித்தரித்து அனுமதி பெறப்படுவதாகப் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தற்போது Toronto-வின் 9 வார்டுகளில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் இதற்கான தடை இன்னும் நீடிக்கிறது.

