மேஷம்
யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சீக்கிரம் வந்து சேராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதே போல் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. குடும்பத்தில் சுபகாரியம் கைகூடும். உங்களது பேச்சாலேயே பிரச்சினைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
ரிஷபம்
வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நல்லுறவு கூடும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கூடும். வரவு செலவுகளை சரிபார்ப்பது நல்லது. காதலர்களிடம் ஊடல்கள் வந்து போகும். உறவினர்களை பார்க்க வெளியூர் செல்வீர்கள். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
மிதுனம்
புதிய வேலைக்கு எடுக்கும் முயற்சி பலிக்கும். இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும். பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். அரசியல்வாதிகளின் உடல்நிலை சீர்படும். வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் நீங்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம் கிரே
கடகம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்
சிம்மம்
உத்யோகஸ்தர்களுக்கு உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
கன்னி
அலைச்சலினால் உடல்நிலை பாதிக்கும். புனித ஸ்தலங்களுக்குச் செல்ல முயற்சிப்போருக்கு காலதாமதம் ஏற்படும்வீடு, வண்டி, வாகனம் ஆகியவற்றில் பழுது பார்ப்பு செலவுகள் உண்டாகும். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிமையாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தின் மேலதிகாரிகளால் நீங்கள் நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பர். பிரச்சினைகள் இருந்தாலும் அவை யாவும் படிப்படியாகத் தீர்ந்து விடும். இனி நிம்மதி கிடைக்கும். சிலருக்கு உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
விருச்சிகம்
காதல் கசக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சிற்சில அசௌகரியங்கள் உண்டாகும். இருப்பினும் அவற்றை சமாளித்து சுமூகமுடன் இருப்பீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். கணவன் – மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
தனுசு
தம்பதிகளிடையே அன்புக்கு குறையிருக்காது. பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும். அடிக்கடி ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
மகரம்
வெளியூர் பயணங்கள் ஏற்படும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்யோகம் சுமுகமாக செல்லும். கூட்டுத் தொழிலில் தொய்வு நிலையும் உண்டாகும். இருப்பினும் ஓரளவு பணவரவு இருக்கும். சளித் தொந்தரவு வரும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
கும்பம்
இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
மீனம்
கடன் கேட்ட இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைக்கும்.வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. குலதெய்வ நேர்த்திக்கடனை முடிப்பது நல்லது. இனி உங்கள் வாழ்க்கையில் வசந்தம் உண்டாகும். தந்தை வழியில் பணம் வரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் கிரே

