கனடாவின் Mississauga நகரில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து Mississauga Road மற்றும் Beaverbrook Way சந்திப்பிற்கு அருகில், Queen Elizabeth Way (QEW) வடபகுதியில் நடந்துள்ளது. மாலை 6.30 மணிக்கு முன்பாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக Peel Regional Police தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் பெண்கள் என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளூர் டிராமா (Trauma Center) சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மற்றையவர் சிறிய காயங்களுடன் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட சாரதி தற்போது போலீச் தடுப்பில் உள்ளார். அவர் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, Mississauga Road தற்போது Beaverbrook Way முதல் Sheridan Way வடபகுதி வரை மூடப்பட்டுள்ளது. மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

