5.3 C
Scarborough

2026 இல் பொருளாதாரம் ஆட்டம் காணும்… 3ஆம் உலகப் போர் மூழும்; பகீர் கிளப்பும் பாபா வாங்கா!

Must read

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தகப் போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026 இல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

எனினும் , பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. பாபா வாங்கா கூறிய பல விடயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப் பொருளாகி வருகிறது.

பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது.

சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். இதன் உச்சமாக 2026 இல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் பாபா வாங்கா இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என பலர் அஞ்சுகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article