5.2 C
Scarborough

ஸ்காட்லாந்துக்கு அபார வெற்றி!

Must read

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – இத்தாலி அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இத்தாலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பிரெண்டன் மெக்முலன் 18 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இத்தாலி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இத்தாலியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றிபெற்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article