16.1 C
Scarborough

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க விடுத்த அறிவுறுத்தல்!

Must read

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஜனவரி 20-ம் திகதி டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இதனையடுத்து, டொனால்ட் டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது சொந்த நாட்டிற்கு சென்றுள்ள மாணவர்களை உடனடியாக அமெரிக்காவிற்கு திரும்புமாறு அந்தந்த கல்லூரிகளின் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article