11.5 C
Scarborough

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

Must read

பிரபல இந்தி நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு சமீபத்​தில் மிரட்​டல் விடுத்​திருந்​தார்.

ரன்​வீர் சிங்​கின் மானேஜரின் வாட்​ஸ்​ஆப் எண்​ணுக்கு வெளி​நாட்டு எண்​ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து மும்பை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​. அந்த வாய்ஸ் மெசேஜை சரி​பார்ப்​ப​தற்​காகப் பஞ்​சாப் மற்​றும் ஹரி​யாணா போலீ​ஸாருக்கு அனுப்பி இருந்​தனர். அது ஹாரி பாக்​ஸர் குரல்​தான் என்​பதை அவர்​கள் உறு​திப்​படுத்​தினர்.

இந்​நிலை​யில் மும்பை போலீ​ஸார், ஹாரி பாக்​ஸருக்கு எதி​ராக, லுக் அவுட் நோட்​டீஸை அனுப்​பி​யுள்​ளனர். அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் இந்த நோட்​டீஸ் அனுப்​பப்பட்​டு உள்​ள​தாகத் தெரி​கிறது.

பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய​தாகக் கைது செய்​யப்​பட்​டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜ​ராத் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அங்கிருந்த​படியே தனது கும்பல் மூலம் பல்​வேறு குற்​றச் செயல்​களில் அவர் ஈடு​பட்டு வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

சல்​மான் கான் வீட்​டில் துப்​பாக்​கி​யால் சுட்​டது, மகா​ராஷ்டிர முன்​னாள் அமைச்​சர் பாபா சித்​திக் கொல்​லப்​பட்​டது, இயக்​குநர் ரோஷித் ஷெட்டி வீட்​டில் துப்​பாக்​கி​யால் சுட்​டது உள்பட பல்​வேறு வழக்​கு​களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல் ஈடு​பட்​டுள்​ள​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டு உள்​ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article