10ஆவது பாராளுமன்றம் இன்று கூடியது.
இதன்போது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் டாக்டர் அர்ஜுனா இராமநாதன் அமர்ந்துவிட்டார்.
அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார் அர்ஜுனா.
புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்… ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா.
முதல்நாளே ரகளை செய்ய ஆரம்பித்துள்ள டொக்டர் அர்ஜூனாவின் மக்கள் அநேகரின் கவனம் திரும்பியுள்ளது.