புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார்.
மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச பிரிட்டன் செல்வதற்கு ஏற்பாடு நடைபெற்றுவந்தது.
எனினும், மேற்படி நிகழ்வில் நாமல் ராஜபக்ச பங்கேற்பதற்கு பிரிட்டனிலுள்ள புலம்பெயர் தமிழ் குழுக்கள் போர்க்கொடி தூக்கின.
நாமலின் உரையை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தின. இதனால் நாமலின் உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமல் ராஜபக்ச தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

