பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த 18 பேர் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.