இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 வயது சிறுமியொருவர் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு , மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு உதவி வருகின்றது.
இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது.
குறித்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள சிறுமி கடும் புயல் 11 அடி அலைகள் காரணமாக படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படகு கவிழ்ந்ததில் தன்னுடன் வேறு இருவரும் கடலில் தத்தளித்ததனர் என்றும், அவர்களை பின்னர் காணவில்லை எனவும் அந்தச் சிறுமி கூறியுள்ளார்.