5.2 C
Scarborough

தொழிலதிபரான நடிகை முமைத்கான்!

Must read

விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ படத்தில் இடம் பெற்ற ‘லேடி என் பேரு மீனா குமாரி. என் ஊரு கன்னியாகுமரி, போலாமா குதிர சவாரி, செய்யலாமா செம்ம கச்சேரி’என நாக்கில் வளையம் குத்திக் கொண்டு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திரையரங்குகளில் ஆட்டம் போட வைத்தவர் முமைத்கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த முமைத்கான் சினிமாவில் இருந்து திடீரென விலகினளார். திடீரென விபத்து ஏற்பட்டு அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். சினிமாவில் ஏற்பட்ட இடைவெளி குறித்து முமைத்கான் அளித்த பேட்டியில், “நான் சினிமாவை விட்டு விலகவில்லை. எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. என் மூளையில் 5 நரம்புகள் உடைந்தன. இதையடுத்து என்னை 7 வருடங்கள் வேலை செய்பக் கூடாது என்று கூறினார்கள். தூங்குவது கூட சாத்திய மில்லாமல் இருந்தது. வலிப்பு தாக்கங்களுக்கு நான் மருத்து சாப்பிட்டு கொண்டிருந்தேன். அதனால் என் உடல் எடை அதிகரித்தது. கடவுள் ஒரு தடையை விதித்தார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். இப்போது யாரையாவது கண்டு பிடித்தால் திருமணத்திற்கு மறுக்க மாட்டேன். என் நாக்கில் வளை யம் போட்டு கொண்ட போது 8 மாதங்களுக்கு 3 முறை முகம் வீங்கியது” என்று அவர் கூறினார்.

இப்​போது, ஹைத​ரா​பாத்​தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்​கப் மற்றும் சிகை அலங்​கார பயிற்சி அகாட​மியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்​றிகர​மான தொழிலதிபராக மாற்றி இருக்​கிறது.

இது பற்றி முமைத்கான் கூறும்​போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்​றோருக்​காக உழைக்​கத் தொடங்​கி ​விட்​டேன். என் இளமைக்​ காலத்தை உழைப்​பில் செல​வழித்​த​தால், திரு​மணம் பற்றியோசிக்க நேரமில்​லை. கடவுள் எனக்கு எல்​லா​வற்​றை​யும் கொடுத்​தார், பிறகு அவரே எடுத்​துக்​கொண்​டார். இப்​போது மீண்டும் புதிய பாதையைக் காட்​டியிருக்கிறார்” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article