22.5 C
Scarborough

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய முயற்சி

Must read

தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன் சிக் இயோலை கைதுசெய்வதற்காக தென் கொரிய பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட பொலிஸார் அவரது இல்லத்திற்குள் சென்றுள்ள நிலையில், வெளியில் பல பொலிஸார் காணப்படுவதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் அவரை கைதுசெய்வதை தடுக்க முயல்கின்றனர். அதேவேளை ஜனாதிபதி கைது தொடர்பில் நீதிமன்றம் அனுமதிவழங்கிய பிடியாணை சட்டபூர்வமற்றது என தெரிவிக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அதனை சவாலிற்குட்படுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article