2.4 C
Scarborough

திருப்பதி கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்!

Must read

2003ம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையிலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர், சாமி தரிசனம் வெளிவந்த நடிகையுடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article