0.9 C
Scarborough

தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

Must read

ஓர் அசலான சினிமாவைச் சம காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த வகையில், 2k மற்றும் GenZ, GenAlpha தலைமுறையினர் உறவுகளைக் கையாள்வதில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் போதாமைகளை, இந்த ‘பூக்கி’ துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.குறிப்பாகப் படத்தின் மையச் சிக்கலை, நுணுக்கமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறது.

‘சலீம்’ படத்தில் தொடங்கி, ஒளிப்பதிவுக்காகக் கவனிக்கப்பட்டு வந்த கணேஷ் சந்திரா, தன்னையொரு துடிப்பான இயக்குநராகவும் இப்படத்தின் வழியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

தற்காலத் தலைமுறையின் காதலில் மலிந்திருக்கும் வீம்புகள், வெட்டி ஈகோ வெடிப்பாக மாறுவது, அதனால் ஏற்படும் பிரிவுக்குப் பிந்தைய பொய்யான வாழ்க்கை ஆகியவற்றை, லைட்- ஹார்ட்டட் பாணியில், அதே சமயம் காதல் மற்றும் சமூக அரசியல் தெளிவோடு சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார்.

இதற்கு அவருக்குப் புதிய பரிதியின் திரைக்கதை மற்றும் கதாபாத்திர எழுத்து எவ்வாறு கைகொடுத்தது? விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு – இசை, நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் எப்படி அமைந்தன என்று எடைபோட்டுப் பார்க்கலாமா?

படித்து வேலையிலிருக்கும் கைலாஷ் – ஆழி இருவரும் 6 வருடமாகக் காதலர்கள். வாழ்வில் இணையும் நோக்குடன் மோதிரங்களைப் பரிமாறிக்கொண்டவர்கள். ஆனால், கைலாஷின் ஆளுமையில் இருக்கும் ஒரு சிக்கல் அவனது முன்கோபம். அது அவனைப் பொது இடங்களில் எடுத்ததும் கைநீட்டும் ஒரு ‘ஹெபிச்சுவல் அப்யூஸர்’ ஆக வைத்திருக்கிறது. கைலாஷ் மீது மலையளவு காதல் இருந்தாலும் அவனது இந்தக் குணத்தை ஆழி கடுகளவும் விரும்பவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article