2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

