டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெஸ்லாவின் பணிப்பாளர் குழுவின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் அரசியல் ஈடுபாட்டினால் வருவாயில் 71 சதவீதம் சரிவு காரணமாக டெஸ்லாவின் பணிப்பாளர் குழு தலைமைத்துவ மாற்றத்தை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய நிறைவேற்றுப்பணிப்பாளரைத் தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.