16.6 C
Scarborough

சிறுமியிடம் பாலியல் சேட்டை – அமெரிக்க நகருக்கு 50 ஆண்டு சிறை!

Must read

கனடிய சிறுமி ஒருவரை தகாத முறையில் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் கனடாவின் எட்மொண்டனில் உள்ள 13 வயது சிறுமியை ஒன்லைன் வழியாக ஏமாற்றி, பாலியல் சுரண்டல் செய்து, அதனைத் தொடர்ந்து எல்லையை கடந்து சிறுமியை கடத்தியதாக கூறப்படும் அமெரிக்க பிரஜையான நோவா மெட்ரானோவுக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நோவா மெட்ரானோ ஜனவரியில் போர்ட்லண்ட், ஓரிகனில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில், ஆறு குற்றச்சாட்டுகளுள் இரண்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன்படி, அவர் மீது குழந்தையை பாலியல் நோக்கத்தில் சுரண்டல், பாலியல் செயலில் ஈடுபடும் குறிக்கோளுடன் கடத்தல் உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களையே அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அரசுத் தரப்பில் மெட்ரானோவுக்கு வாழ்நாள் சிறைதண்டனை கோரப்பட்டது. மெட்ரானோ தரப்பு சட்டத்தரணிகள் 292 மாதங்கள் (சுமார் 24.5 ஆண்டுகள்) கோரினர்.

சிறுமி 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்மொண்டனில் காணாமல் போனார். 9 நாட்கள் கழித்து ஓரிகனில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் காவல்துறையால் மீட்கப்பட்டார். நீதிமன்றத்தில் கூறப்பட்டதைப் போல, மெட்ரானோ ஒரு வருடமாக ஒன்லைனில் சிறுமியை சீண்டல் செய்து, பின்னர் பாடசாலை பஸில் இருந்து இறங்கியவுடன் தனது வாகனத்தில் கட்டாயமாக ஏற்றி அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, மெட்ரானோவுக்கு மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article