11.1 C
Scarborough

கொல்கத்தாவை வீழ்த்தி வென்றது சென்னை அணி

Must read

குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அதன்படி, போட்டியின் நாணயசுற்சியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதனடிப்டையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.

சென்னை அணி சார்ப்பில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளுக்கு 48 ஓட்டங்களையும் , ஆயுஸ் மாத்ரே 17 பந்துகளுக்கு 38 ஓட்டங்களுக்கும் மற்றும் டெவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளுக்கு 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, 193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அதன்படி சென்னை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குறித்த போட்டியில் வெற்றிப்பெற்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article