3 C
Scarborough

கடன்கள் அடைபடும் நாள்…. இன்றைய ராசிபலன் – 05.02.2026!

Must read

மேஷம்

உங்களை ஈர்க்கச் செய்யும் முதலீட்டு திட்டங்களைப் பற்றி தீர விசாரிப்பது நல்லது. திடீர் நற்செய்தி குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கிளைகள் துவங்குவர். காதலர்களிடம் ஊடல்கள் ஏற்படும். வாய் நிதானம் தேவை அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் பலிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

குடும்பத் தலைவிகள் தங்கள் பிள்ளைகளுக்கா தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். உறவினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

கழகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள. உயர்பதவி மற்றும் பொறுப்பும் கிடைக்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். முக்கிய பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். மனைவியின் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். பணம் பல வழிகளில் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

வியாபாரம் அமோகமாக இருக்கும். கையில் காசு, பணம் புரளும். பழைய கடன்கள் அடைபடும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும். நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

துலாம்

வழக்குகள் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். பெண்களுக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் வந்து நீங்கும். இளைஞர்களுக்கு வெளிநாடு வேலை வரவாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

மார்கெட்டிங் பிரிவினர் ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள்.தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். அரசுத் தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article