இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான போயிங் – 747 – 400 (Boeing – 747 – 400) சரக்கு விமானம் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
நிவாரணப் பொருட்களின் விவரம்:
இந்த விசேட விமானம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகியவற்றிலிருந்து பின்வரும் உதவிகள் கொண்டு வரப்பட்டன:
* ஜெர்மனி: 05 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்கள்.
* லக்சம்பர்க்: மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட கூடாரங்கள் (Tents), சமையல் உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்.
அதிகாரிகளின் வருகை:
இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கையிலுள்ள ஜெர்மன் தூதரகத்தின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபோன் (Pierre Tripon) மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

