19.1 C
Scarborough

எலான் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

Must read

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கியுள்ளனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். 2030ஆம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இவரது இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் அதிக  அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த இடம் டிக் டிக்-ஆக இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, எனவே நாம் இப்போது நமது உச்சத்தில் இருக்கிறோம் என்றே கூறுவேன். அதை விட்டு வெளியேற இப்போது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article