14.6 C
Scarborough

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பாப்பரசருக்கு விருப்பம்!

Must read

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை வத்திக்கானில் நடத்துவதற்கு பாப்பரசர் 14ஆம் லியோ தன்னுடன் ஒரு தொலைபேசி அழைப்பின் போது உறுதிப்படுத்தியதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“வத்திக்கானில் அடுத்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தயார்நிலையை பரிசுத்த தந்தையிடம் உறுதிப்படுத்திய பிரதமர், அமைதிக்கான இடைவிடாத உறுதிப்பாட்டிற்காக பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புட்டினுக்கு இடையேயான தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பாப்பரசர் ஆர்வம் காட்டுவதாக மெலோனியின் அலுவலகம் கூறியதை வரவேற்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். .

இதேவுளை மே 14 அன்று பாப்பரசர் ஆற்றிய உரையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிடாமல், உலகளாவிய மோதல்களில் வத்திக்கான் ஒரு மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article