0.9 C
Scarborough

ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்!

Must read

ஈரானில் கொமேனி அரசுக்கு எதி​ராக மக்​கள் உள்​நாட்டு கலவரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​வேறு கட்​டுப்​பாடு​களை எதிர்த்​தும் சுதந்​திரம் வேண்​டி​யும் பொது​மக்​கள் ஈரான் முழு​வதும் வன்​முறை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது அரசு கடும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் ஆயிரக்​கணக்​கானோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், அப்​பாவி பொது​மக்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதை நிறுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரித்​தார். அதற்​காக ஏற்​கெனவே ஒரு போர்க் கப்​பலை மத்​திய கிழக்​குப் பகு​திக்கு அனுப்பி வைத்​தார். ஆனால், ஈரான் மீது தாக்​குதல் நடத்​தி​னால் அமெரிக்​கா, இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று ஈரானும் எச்​சரித்​தது.

இந்​நிலை​யில், மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் ஏற்​கெனவே உள்ள போர்க் கப்​பலுக்கு உதவி​யாக ‘யுஎஸ்​எஸ் ஜெரால்டு ஆர் போர்​டு’ என்ற 2-வது போர்க் கப்​பலை அமெரிக்கா அனுப்பி வைக்​கும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்தை சேர்ந்த உயர​தி​காரி நேற்று தெரி​வித்​தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்​கும் பணி​களில் ஈடு​படு​வ​தாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்​றம் சாட்டி வரு​கிறார். அந்​தப் பின்​புலத்​தி​லும் ஈரானில் உள்​நாட்டு கலவர​மும் சேர்ந்​துள்​ள​தால் பெரும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதை தணிக்க ஓமன் மற்​றும் கத்​தா​ரில் ஈரான் – அமெரிக்கா உட்பட முத்​தரப்பு பேச்​சு​வார்த்தை கடந்த வாரம் நடத்​தப்​பட்​டது. எனினும், அந்​தப் பேச்​சு​வார்த்​தை​யில் சுமுக முடிவு எட்​டப்​பட​வில்​லை.

இதையடுத்​து, ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால் ஏற்​கெனவே இஸ்​ரேல் – ஹமாஸ் இடையே நடை​பெற்​று​வரும் சண்டை மத்​திய கிழக்​குப் பகுதி முழு​வதும் பரவும் என்று வளை​குடா நாடு​கள் எச்​சரித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் அமெரிக்கா 2-வது போர்க் கப்​பலை மத்​திய கிழக்​குப் பகு​திக்கு அனுப்​பி​னால்​ நிலை​மை மோச​மாகும்​ என்​று அஞ்சப்​படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article