11.6 C
Scarborough

இலங்கையில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு!

Must read

இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்தி 17 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் மதுபானங்களின் விலைகளில் பெரிய மாற்றம் இல்லாதது நுகர்வு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பணவீக்கம் இருந்தபோதிலும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பது இதற்கான தேவையை உயர்த்தியுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி உயர்வுகள் விற்பனை அளவைக் குறைத்திருந்த நிலையில், தற்போது கலால் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த மையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article