2.4 C
Scarborough

இறுதி சமரில் அமெரிக்காவுடன் மோதும் கனடா!

Must read

மிலன் (Milan) நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில், உலகமே எதிர்பார்த்த இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான கனடா (Canada) மற்றும் அமெரிக்கா (USA) அணிகள் இன்று மோதுகின்றன.

இவற்றில் கனடா அணி வீராங்னைகளின் சராசரி வயது 29.2 ஆகவும் அமெரிக்க அணி வீராங்னைகளின் சராசரி வயது  25.8 ஆகவும் காணப்படுகிறது.

மரி-பிலிப் பூலின் (Marie-Philip Poulin): கனடாவின் நட்சத்திர வீராங்கனை பூலின், இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 20 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஹிலாரி நைட் (Hilary Knight): அமெரிக்காவின் ஹிலாரி நைட், 32 புள்ளிகளுடன் அந்நாட்டின் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாகத் திகழ்கிறார்.

கடந்த 376 நாட்களாக கனடாவிடம் அமெரிக்கா தோற்றதே இல்லை. இந்தத் தொடரில் அமெரிக்காவின் கோல் கீப்பர் ஏரின் பிராங்கல் (Aerin Frankel) வெறும் ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்து அசுர பலத்துடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடா அணி 36.84% பவர்-பிளே (Power-play) புள்ளிகளுடன் இந்தத் தொடரில் முன்னிலையில் உள்ளது. இதுவே இந்த போட்டியில் கனடா அணியின் வலுவாக காணப்படுகிறது.  ஏழு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ள கனடா, இன்றைய முக்கிய ஆட்டத்தில் அமெரிக்காவின் தடையை உடைத்து தங்கப் பதக்கத்தைத் தக்கவைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article