19.5 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 07.08.2025

Must read

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும். தொழிலில் விருத்தி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு உண்டு. வாகனப் பயணத்தில் சிக்கல்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் உயரும்.தம்பதிகளிடையே யோசித்து பேசுவது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். அரசியல் தொடர்புகள் பயனளிக்கும். மாணவர்களுக்கு சிறந்த நாள். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

குழந்தைகளுக்கு உடல் நலனில் சிறிய சிக்கல்கள் வரலாம். கவனம் தேவை. குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். தொழிலில் நிதானம் அவசியம். பெண்களுக்கு அக்கம்பக்கத்தார் உதவி தருவர். மாணவர்களுக்கு நன்கு படிப்பர். பழைய நினைவுகள் மனதை பாதிக்கும். பண நெருக்கடியை சமாளிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

தொழில் பலமடங்கு விரிவாகும் சூழ்நிலை உள்ளது. பயன்படுத்திக் கொள்வது நல்லது. வாகனச் செலவு ஏற்படும். குடும்பத்தில் விருந்தினர் வருகை ஏற்படும். இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு புதிய ஆடைகள் சந்தோஷம் தரும். பயண யோகம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியாக வேலை செய்வது நிம்மதி காப்பர். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பர். தொழிலில் திட்டமிடல் வெற்றியளிக்கும். மாணவர்கள் படிப்பில் மனதை செலுத்துவார்கள். புதிய முயற்சி ஆரம்பிக்கலாம். உறவினர் மூலம் நன்மை.

அதிர்ஷ்ட நிறம்: நீலப்பச்சை

துலாம்

பணவரவிற்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பெண்களுக்கு கல்யாணம் தொடர்பான சந்திப்பு ஏற்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவர். புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படும். வீட்டு வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயண யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

பண வரவு நிலைத்திருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும். வீட்டில் அமைதி நிலவும். பெண்களுக்கு ஆதாயங்கள் உண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும். வாகன பராமரிப்பில் கவனம் தேவை. பயணங்களில் சீராக நடக்கும். மொத்ததில் முன்னேற்றம் காணப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பெண்களுக்கு அழகு சாதன பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும்.வீட்டில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நன்மை உண்டு. வீடு தொடர்பான திட்டம் வெற்றியடையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

உறவினர் வழி ஆதரவு உண்டு. நண்பர்களின் நல்லிணக்கம் காணலாம். பெண்களுக்கு குடும்ப மதிப்பு அதிகரிக்கும். அரசியல் தொடர்புகள் நன்மை தரும். தொழிலில் பழைய நட்டம் ஈடாகும். தொழில் விரிவுக்கு வாய்ப்பு. பயணத்திற்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

கும்பம்

புதிய வியாபாரம் ஆரம்பிக்கலாம். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலம் மேம்படும். சமய வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைகூடும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உறவினர் வழியாக நன்மைகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் இணையத்தளம் மூலம் கிடைப்பர். அவர்களிடம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article