மேஷம்
வியாபாரிகளுக்கு போட்டிகள் விலகும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். தம்பதிகள் ஒற்றுமை காப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
மருத்துவர்களின் புகழ் ஓங்கும். வழக்குகள் சாதகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்
மிதுனம்
வியாபாரிகளின் விற்பனை கூடி லாபம் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் சண்டை வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மாற்றலாகி போய்விடுவர். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கடகம்
பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். விரைவில் தங்கள் படம் வெளியாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

