இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (14) இன்டன் ஜயா பகுதியில், அப்பகுதி மக்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்களும், 2 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தோனேசியாவுடன் பண்டைய டச்சு காலனியான பப்புவா மாகாணத்தை இணைத்த காலத்தில் இருந்து, கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.