3 C
Scarborough

”இந்திய அணி மிகவும் ஆபத்தானது” – எம்.எஸ்.தோனி கருத்து

Must read

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்குகிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இரு முறை சாம்​பிய​னான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா​வுடன் 7-ம் தேதி மோதுகிறது.

இந்​தத் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி பேட்​டிங், பந்​து​வீச்​சில் முழுபலத்​துடன் களமிறங்​கு​கிறது. இதனால் இந்​திய அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் முதன்​முறை​யாக சாம்​பியன் பட்டத்தை தக்​க​வைத்​துக் கொள்ள வாய்ப்பு இருப்​ப​தாக கருதப்​படு​கிறது.

இந்​நிலை​யில் தனி​யார் நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான எம்.எஸ்​.தோனி கூறிய​தாவது:

இந்​திய அணி மிக​வும் ஆபத்​தான அணி​களில் ஒன்​றாக இருக்​கிறது. ஒரு நல்ல அணிக்கு என்ன தேவையோ அனைத்​துமே இங்கு இருக்​கிறது. டி20 போட்​டிக்​கான அனுபவம் மிக்க வீரர்​கள் பலர் இருக்​கிறார்​கள். அவர்​கள், நெருக்​கடி​யான சூழ்​நிலைகளில் விளை​யாடி​யுள்​ளனர். எனக்​குக் கவலை அளிக்​கும் விஷ​யம் என்​னவென்​றால் பனிப் பொழி​வு​தான்.

போட்​டி​யின் போது பனிப்​பொழி​வால் ஏற்​படும் ஈரப்​ப​தம் எனக்கு பிடிக்​காது. பனிப்​பொழிவு பல விஷ​யங்​களை மாற்​றி​விடும். நான் விளை​யாடிக்​கொண்​டிருந்த காலங்​களில்​கூட, பனிப்​பொழிவு என்னை மிக​வும் பயமுறுத்தியது. அது டாஸை மிக​வும் முக்​கிய​மான​தாக மாற்​றி​விடும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article