14.6 C
Scarborough

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Must read

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந் திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சி யும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை.” எனவும் அவர் கூறினார்.

ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பதில் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பாகச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின் றோம்.” – எனவும் சி.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article