2.8 C
Scarborough

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு!

Must read

எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது.

ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தி​யா, இலங்​கை​யில் தொடங்குகிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொள்கின்றன. இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது. இதே பிரி​வில் போட்டியை நடத்​தும் நடப்பு சாம்​பி​யனான இந்​தி​யா, நமீபியா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.

இந்த சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தங்கள் அணி விளையாடும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டுமென வங்கதேச அணி, ஐசிசி-யை முறையிட்டது. அது முடியாத காரணத்தால் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் என ஐசிசி அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.

இப்படி வங்​கதேசத்​துக்கு ஆதரவாக உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து சந்​தேகத்தை கிளப்பி அச்​சுறுத்​தல் விடுத்த பாகிஸ்​தானுக்கு ஐசிசி கடும் எச்​சரிக்கையை அனுப்​பி​யிருந்​தது. இவ்​வாறு செய்​தால் கிரிக்​கெட் உலகி​லிருந்து பாகிஸ்​தான் முழுமை​யாக தனிமைப்​படுத்​தப்​படும் என்​றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்​தது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் தங்கள் அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது.

இந்நிலையில், இந்தியா உடன் வரும் 15-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஐசிசியின் ரியாக்‌ஷன் என்ன என்பது விரைவில் தெரியவரும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article