2.4 C
Scarborough

அவுஸ்ரேலியாவை அடுத்து இலங்கையையும் வீழ்த்தியது சிம்பாப்வே!

Must read

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 62 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களையும், குஷல் பெரேரா 22 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

அதற்கமைய 179 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த லீக் ஆட்டத்தில் ஜம்வான் அணியான அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அந்த அணியை டி20 உலகக் கிண்ண தொடரிலிருந்தே சிம்பாவே அணி வெளியேற்றியிருந்தமை உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article