இஸ்ரேல் – காசாபோர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக இன்று(25) இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 200 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
பணயக் கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் குழுவினர் இன்று விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்யவில்லை.
இந்நிலையில், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பலஸ்தீனியர்களை வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி அர்பெல் யாஹுட் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை. ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது. இதனால், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை வடக்கு காசாவுக்கு பலஸ்தீனியர்களை திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பணயக் கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை(01) அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.