16.6 C
Scarborough

அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்

Must read

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் அவரது புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக புதிய கட்சியை தொடங்குவது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பும் கேட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article