ஜேம்ஸ் கேமரூன் இயக்கி கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம், ‘அவதார்’. இதன் அடுத்த பாகமான ‘அவதார் 2’, 2022-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. இப்போது, இதன் 3-ம் பாகம், ‘அவதார் – ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
நாளை (டிச.19) வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இயக்குநர் ராஜமவுலியுடன் உரையாடினார். வீடியோவில் தோன்றிய ஜேம்ஸ் கேமரூனிடம், “அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தைப் பார்த்துவிட்டேன். பார்க்கும்போது சிறு குழந்தையைப் போல உணர்ந்தேன். தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும், படத்தைப் பற்றிய எண்ணங்கள் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தன. ஹீரோ ஜேக் எடுத்த முடிவுகளும் அவர் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கும் காட்சிகளும் அற்புதமாகப்படமாக்கப்பட்டுள்ளன.

