2.7 C
Scarborough

மழையால் ரத்தானது போட்டி – சூப்பர் 8 இல் நுழைந்தது ஜிம்பாப்வே!

Must read

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரி​வில் இலங்​கை​யின் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ஜிம்பாப்வே – அயர்லாந்து அணி​கள் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் இந்த ஆட்​டம் மழை காரண​மாக ஒருபந்​து​கூட வீசப்படாமல் ரத்து செய்​யப்​பட்​டது.

இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்​பாப்வே அணி 5 புள்ளிகளு​டன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது. அந்த அணி 2 வெற்​றிகளை பதிவு செய்​திருந்​தது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்கை அணி 6 புள்​ளி​களு​டன் ஏற்​கெனவே சூப்​பர் 8 சுற்றில் கால்​ப​தித்து இருந்​தது.

ஜிம்​பாப்வே – அயர்​லாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் ரத்து ஆனதால் இதே பிரி​வில் இடம் பெற்​றிருந்த முன்​னாள் சாம்​பிய​னான ஆஸ்​திரேலிய அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. இதனால் அந்த அணி லீக் சுற்​றுடன் வெளியேறுகிறது.

மிட்​செல் மார்ஷ் தலை​மையி​லான ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்களில் 2 தோல்​வி, ஒரு வெற்​றியை பதிவு செய்திருந்தது. லீக் சுற்றை 3 புள்​ளி​களு​டன் நிறைவு செய்த அயர்​லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article