10.4 C
Scarborough

போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை

Must read

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில், பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், அரச அதிகாரிகளும், திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் கலந்துகொண்டனர். ஆனால், காணிகளை இழந்த மக்கள் இதில் கலந்துகொள்ள அழைக்கப்படவில்லை.

இது எந்த வகையில் நியாயம்? தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் தொடர்பில்லை. இராணுவமே இந்த ஆக்கிரமிப்பைச் செய்தது.

அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதான் இந்த விகாரையை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டார். இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரையாகும்.

எனவே, இந்த விடயத்தில் அரசு நீதியான முறையில் தலையிட வேண்டும். மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு, இவ்வாறான மோசமான செயல்களுக்குத் துணைபோகக்கூடாது.” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article