12.9 C
Scarborough

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி – தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

Must read

ஜம்மு-காஷ்மீரில் 10 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் எதிரொலியாக, இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தெற்கு காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகளின் வீடுகள் நேற்று முன்தினம் (25) இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இந்தநிலையில், இதுவரை மொத்தம் 10 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article