10.4 C
Scarborough

நைஜீரியாவில் துப்பாக்கி சூடு ; பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

Must read

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான ஸம்பாராவில் (Zamfara) உள்ள கிராமம் ஒன்றின் மீது இரவு வேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கி சூடு ஸம்பாராவின் புக்கூயும் (Bukkuyum) பகுதியில் உள்ள தங்கன் துட்ஷா (Tungan Dutse) கிராமத்தில் வியாழக்கிழமை (12) இரவு முதல் வெள்ளிக்கிழமை (13) காலை வரை நீடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய நபர்கள், அப்பகுதியிலுள்ள கட்டிடங்களுக்குத் தீ வைத்ததுடன் குடியிருப்பாளர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காணாமல் போனவர்களின் பட்டியலை அந்நாட்டு அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஆயுதமேந்திய கும்பல்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், நைஜர் மாநிலத்தின் போர்கு (Borgu) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர்.

கொன்கோசோ (Konkoso) கிராமத்தில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலில் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பலர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article