நைஜீரியா நாட்டின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் சமீபத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் ஒன்று பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு, போப் லியோ வருத்தம் தெரிவித்து உள்ளார்.
நைஜீரியாவில் பல்வேறு சமூகத்தினருக்கு எதிராக நடந்த இந்த கொடூர தாக்குதல்கள் பற்றிய செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு பலியான அனைவரின் நெருங்கிய உறவினர்களுக்காக நான் வேண்டி கொள்கிறேன்.
ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்மானத்துடன் அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

