5.2 C
Scarborough

நடுரோட்டில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்; வாகனங்கள் மீது மோதி விபத்து

Must read

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில், பயிற்சி சிறிய விமான ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து பல கார்களை முட்டி மோதி சேதப்படுத்தியது. பயிற்சியை முடித்துவிட்டு, விமான நிலையத்திற்குத் திரும்புவதற்கு போதுமான சக்தி இல்லாததால், கெய்ன்ஸ்வில்லில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் ஒற்றை இன்ஜின் கொண்ட பயிற்சி விமானத்தை விமானி தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் அவசரகதியில் தரையிறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், சாலைகள் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மீது மோதி விமானம் சட்டென தரையிறங்கிய கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடி, சாலையில் மையத்தில் இருந்த பிரிப்பான்கள் மீது மோதியது.

தொடர்ந்து வலதுபுறமாக நின்றிருந்த பல கார்கள் மீதும் அடுத்தடுத்து முட்டி மோதி நின்றுள்ளது. விமான மோதிய வேகத்தில் பல கார்களும் கடுமையாக சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து குறிப்பிட்ட சாலை மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article