2.1 C
Scarborough

டி20 உலகக்கோப்பையில் கனடாவின் இளம் வீரர் யுவராஜ் சாதனை!

Must read

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடந்த கனடா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 31-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து ஆடிய அந்த அணியில், யுவராஜ் சம்ரா (வயது 19) சிறப்பாக விளையாடினார். அவர் 11 பவுண்டரிகளையும், 6 சிக்சர்களையும் அடித்து 65 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில், சம்ரா டி20 உலக கோப்பையில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 58 பந்துகளில் சதம் பூர்த்தி செய்துள்ளார்.

இதனையடுத்து, 22 வயதில் சதம் அடித்த பாகிஸ்தானின் அகமது ஷசாத்தின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். இதனால், நியூசிலாந்துக்கு எதிராக 174 என்ற வலுவான இலக்கை கனடா நிர்ணயித்து உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article