4.5 C
Scarborough

குளிர்கால ஒலிம்பிக் – நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது கனடா ஹாக்கி அணி!

Must read

2026 குளிர்கால ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் அடிப்படையில் Canada, USA, Slovakia மற்றும் Finland ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்து நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 4 இடங்களுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன. இதில் Switzerland vs Italy, Germany vs France, Sweden vs Latvia மற்றும் Czechia vs Denmark ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள், புதன்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டிகளில் ஏற்கனவே காத்திருக்கும் முன்னனி அணிகளுடன் மோதும்.

தற்போது வரை Canada அணியின் Connor McDavid அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று வரும் அணிகளுக்கு ஏற்ப அரையிறுதி ஆட்டங்களுக்கான தரவரிசை மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article